ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව

காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்

Land Commisioner General's Department

Ministry of Agriculture, Livestock, Land and Irrigation

පැති මෙනුව

செய்திகள்

2026 ஜனவரி மாதம் 19, 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையின் கீழ், அம்பாறை மாகாணங்களுக்கு இடையிலான காணி ஆணையாளர் அலுவலகம் மற்றும் அம்பாறை மாவட்ட செயலகங்களில் நிலுவைக் குத்தகைகள் மற்றும் காணிப் பிரச்சினைகள் சார்ந்த நடமாடும் சேவைகளும் பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலொன்றும் நடாத்தப்பட்டன.

இதற்கமைய, 19 ஆம் திகதி குத்தகை கோப்புகள் பரிசீலனையும், 20 ஆம் திகதி நிலுவையிலுள்ள குத்தகைதாரர்களுடனான கலந்துரையாடலும் களப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதுடன், 21 ஆம் திகதி அம்பாறை வர்த்தக சமூகத்தினருடனும், அதேபோன்று அம்பாறை மாவட்ட செயலாளர் மற்றும் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஆகியோரின் பங்கேற்புடன் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களுடனும் கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டது.


கோப்பு முகாமைத்துவம் மற்றும் அலுவலகக் கடிதங்கள் எழுதுதல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் ஒன்று, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்காக, நீர்ப்பாசன மேலதிக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) திருமதி திலங்கா வெத்தசிங்க அவர்களினால் 2025.12.17 மற்றும் 18 ஆம் ஆகிய இரு தினங்களில் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தில் நடத்தப்பட்டது.


அரச காணிகளுக்கான இலவச அளிப்புப் பத்திரங்களை வழங்கும் "ஹிமிகம" (உரித்து) நிகழ்ச்சித் திட்டம், e-Slims அமைப்பின் (System) ஊடாக ஹிமிகம அளிப்புப் பத்திரங்களைத் தயாரித்தல் மற்றும் e-Slims அமைப்பின் ஊடாக காணி கடமைகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான நிகழ்ச்சித் திட்டமொன்று கேகாலை மாவட்ட பிரதேச செயலகங்களின் காணிப் பிரிவு அதிகாரிகளுக்காக நடாத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சித் திட்டமானது காணி ஆணையாளர் நாயகத்தின் மேற்பார்வையின் கீழ், சபரகமுவ மாகாண காணி ஆணையாளர் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் வளவாளர் பங்களிப்புடனும் 2025 திசம்பர் 09 ஆம் திகதி யட்டியாந்தோட்டை, கொமாடுவ கிராமிய அபிவிருத்திப் பயிற்சி மையத்தில் நடைபெற்றது.


அரச ஊழியர்களின் ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் விடுமுறைகள் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டமொன்று, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமை அலுவலக அதிகாரிகளுக்காக, பொலன்னறுவை உதவித் தேர்தல் ஆணையாளர் மனோஜி திலக்ஷிகா அவர்களினால் 2025.12.16 ஆம் திகதி காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தில் நடத்தப்பட்டது.


நாட்டைப் பாதித்த அவசர அனர்த்த நிலைமை காரணமாக, காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் மஹியங்கனை மாகாணங்களுக்கு இடையிலான அலுவலகம் வெள்ளப் பெருக்கினால் பாரியத சேதத்திற்குள்ளாகியுள்ளது. இச் சேதங்களை அவதானித்து, மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவதற்காக காணி ஆணையாளர் நாயகம் சந்தன ரணவீர ஆரச்சி அவர்கள் 2025.12.11 ஆம் திகதி அன்று அவ் அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வ அவதானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது, சேதமடைந்த ஆவணங்களை மறுசீரமைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், விசேடமாக குத்தகை பேரேடுகள் (Lease Ledgers) உள்ளிட்ட பல அத்தியாவசிய கோப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அழிவடைந்துள்ளமை மிகவும் பாரதூரமானதொரு பிரச்சினையாக அவதானிக்கப்பட்டது.

மேலும், மஹியங்கனை சுற்றுலா விடுதி மற்றும் ஆணையாளரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியன சுமார் 4 அடி வரை வெள்ள நீரில் மூழ்கியிருந்தன. இங்கு மாகாணங்களுக்கு இடையிலான அலுவலகத்தில் அழிவடைந்துள்ள கணினிகள், நாற்காலிகள், மேசைகள் உள்ளிட்ட பௌதிக வளங்களை விரைவாக வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாகாணங்களுக்கிடையிலான காணி ஆணையாளர் திருமதி எம். எம். கே. புஷ்பகாந்தி, உதவி காணி ஆணையாளர் திரு. ஆர். எம். பி. பி. ரணதுங்க ஆகியோர் கலந்துகொண்டதோடு, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அலுவலக உத்தியோகத்தர்களின் சில வீடுகளும் பார்வையிடப்பட்டன. அனர்த்த இழப்பீடுகளை வழங்கும் போது சொத்து இழப்புகளை எதிர்கொண்ட உத்தியோகத்தர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.


அரச காணி தகவல் மற்றும் முகாமைத்துவ தரவுத் தொகுதி (e-Slims) ஊடாக காணி கச்சேரி முன்மொழிவுகளை அனுமதிக்கு சமர்ப்பித்தல், காணி கச்சேரிகளை நடாத்துதல் மற்றும் மேன்முறையீடுகள்/ ஆட்சேபனை பரிசீலனைகளை நடாத்துதல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டமொன்று அநுராதபுரம் மாகாணங்களுக்கு இடையிலான அதிகாரப் பிரதேசத்தில் கடமையாற்றும் உத்தியோத்தர்களுக்காக 2025-11-20 மற்றும் 21 ஆகிய இரு தினங்களில் அநுராதபுரம் மாவட்ட செயலகத்தின் கணினிப் பிரிவில் நடைபெற்றது.

காணி ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் பேரில், அநுராதபுரம் மாகாணங்களுக்கிடையிலான காணி ஆணையாளரினால் இந் நிகழ்ச்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் வளவாளர் பங்களிப்புடன் இந் நிகழ்ச்சித் திட்டம் நடாத்தப்பட்டது.


தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட காணி ஆணையாளர் நாயகம் திணைக்கள உத்தியோகத்தர்களின் வீடுகளைத் தூய்மைப்படுத்தும் சிரமதானப் பணி.


அரச காணி தகவல் மற்றும் முகாமைத்துவ தரவுத் தொகுதி அல்லது e-Slims அமைப்பின் ஊடாக அரச காணிகள் தொடர்புடைய கடமைகளை விரிவாக்குவதற்காக நாடு தழுவிய ரீதியில் வளவாளர்கள் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.

இக்குழுவிற்கான பயிற்சிகள் 04 கட்டங்களின் கீழ் நடாத்தப்படவுள்ளன. இதன் முதற்கட்டப் பயிற்சிகள் 2025.10.15 மற்றும் 16 ஆகிய இரு தினங்களில் ரத்மலானை காணி தகவல் மற்றும் முகாமைத்துவ பயிற்சி மையத்தில் காணி ஆணையாளர் நாயகத்தின் தலைமையில் நடைபெற்றது.


காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின், திருகோணமலை இடைமாகாண காணி ஆணையாளர் அலுவலக விடயத்திற்குப் பொறுப்பான உத்தியோகத்தர்களுக்காக, அரச காணி தகவல் மற்றும் முகாமைத்துவ தரவுத் தொகுதயின் (e-Slims) ஊடாக காணி கச்சேரிகளை நடாத்துவது பற்றிய நிகழ்ச்சித் திட்டமொன்று 2025.09.25 மற்றும் 26 ஆகிய இரு தினங்களில் திருகோணமலை மாகாணங்களுக்கிடையிலான காணி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.


இலங்கை அரச சேவை விளையாட்டு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டித் தொடரின் (2025) மகளிர் சாம்பியன் பட்டத்தை, இறுதிப் போட்டியில் பாணந்துறை பிரதேச செயலக அணியைத் தோற்கடித்து காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் வென்றது. இப்போட்டித் தொடரின் ஆட்ட நாயகன் (தொடராட்ட நாயகி) விருதை காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி ஆஷா கஜநாயக்க வென்றதுடன், தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் திலானி ஜயவர்தன வென்றார்.


பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.