எங்களது சேவைகள்
காணி பிரதான (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் உரிமைப் பத்திரம் வழங்குதல்
- காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் செயல்முறைகள்
- இலங்கையின் விவசாய வர்க்கம், குறைந்த வருமானத்தைக் கொண்ட வர்க்கம், உயர் வருமானத்தைக் கொண்ட வர்க்கம் மற்றும் படித்த இளைஞர்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தனி நபர்களுக்கு, விவசாய நடவடிக்கைக்காக அல்லது வசிப்பதற்கான ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்காக அல்லது இவ்விரு காரணங்களுக்காகவும் காணிகளை வழங்குவது இதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இவை தவிர்ந்த ஏனைய காரணங்களுக்காக இக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகள் வழங்கப்பட மாட்டாது.
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அளிப்புப் பத்திரங்களை வெளியிடுதல்
- அரசு காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை விடுவித்தல்
- அரசாங்கத் திணைக்களங்களுக்கு காணிகளை வழங்கும்போது காணி விடுவிப்புச் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும்
நீண்டகால குத்தகை உரிமைப் பத்ததிரங்களை வழங்குதல்
- நீண்டகால குத்தகை உரிமைப் பத்திரங்களை வழங்குதல்
- 1947 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குத்தகை உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. வசிப்பிடம், விவசாயம் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக 30 வருட காலப்பகுதிக்கு தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் நீண்டகால குத்தகைகள் வழங்கப்படுகின்றன. விசேட திட்டங்களுக்காக குத்தகைக் காலத்தை 50 வருடங்கள் வரை நீடிக்க முடியும். ஆரம்ப குத்தகைக் காலத்தின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் குத்தகைக் காலத்தை நீடிக்க முடியும். இவ்வுரிமங்களை காணி ஆணையாளரின் முன் அனுமதியைப் பெற்றுக்கொண்டு கைமாற்றவோ அல்லது அடகு வைக்கவோ முடியும்.
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை விடுவித்தல்
- காணிகளை விடுவித்தல்
- அரசாங்கத் திணைக்களங்களுக்கு காணிகளை வழங்கும்போது காணி விடுவிப்புச் சான்றிதழ் பத்திரம் ஒன்று வழங்கப்படும்
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பூஜா உறுதிப் பத்திரம் வழங்குதல்
- அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பகிர்ந்தளிப்பு கட்டளைகள்
- முப்படைகளுக்கும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் காணிகளைப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்காகப் பகிர்ந்தளிப்பு கட்டளைகள் தயாரிக்கப்படுதல் வேண்டும்.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 'ரன்பிம' அளிப்புப் பத்திரங்களை வழங்குதல்
-
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ரன்பிம (Ranbima) அளிப்புப் பத்திரங்களை வழங்குதல்
-
இலங்கை வாழ் விவசாயப் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் மூலமான அரச காணிகளைப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தின் கீழ் கொடைப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
-
பிரதேச செயலகம்.
-
காணிப் உரிமையாளர்களினால் தமது காணிக்குக் கொடைப் பத்திரம் ஒன்றினை வழங்குமாறு கோரிக்கை விடுத்தல்.
-
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் களப் பரிசோதனை ஒன்றின் பின்னர், காணி முறையாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது எனின், கொடைப் பத்திரம் ஒன்றினை வழங்குவதற்காகக் காணியை அளவீடு செய்து, எல்லைக் கற்கள் இடப்பட்டு, வரைபட வடிவமைப்பு ஒன்றைத் (Tracing) தயாரித்து அனுப்புமாறு மாவட்ட அளவை அத்தியட்சகருக்கு அளவை ஆணை (Survey Order) ஒன்றினைப் பிறப்பிப்பர்.
-
அதற்கமைய, அளவை அத்தியட்சகரினால் தயாரிக்கப்பட்ட வரைபட வடிவமைப்பு (Tracing) பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
அளவை அலுவலகத்தின் வரைபடவடிவமைப்பு கிடைத்த பின்னர், பிரதேச செயலாளரினால் எல்.சி. 156 (L.C. 156) படிவத்தில் துல்லியமாகக் அளிப்புப் பத்திரம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்.
-
அளிப்புப் பத்திரங்களுக்கான இலக்கங்களை வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், சில மாகாணங்களில் அவ்விலக்கங்கள் மாகாண காணி ஆணையாளரினால் வழங்கப்படும்.
-
தயாரிக்கப்பட்ட அளிப்புப் பத்திரங்கள் மாகாண காணி ஆணையாளர் / பிரதி காணி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். இவற்றுடன் 2008/01 இலக்கச் சுற்றறிக்கை அறிக்கையும் கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
-
மேதகு ஜனாதிபதி அவர்களினால் கையொப்பமிடப்பட்ட அளிப்புப் பத்திரங்கள் மீண்டும் பிரதேச செயலாளருக்குக் கிடைத்த பின்னர், அளிப்புப் பத்திரங்களைப் பதிவு செய்வதற்காகக் காணிப் பதிவு அலுவலகத்திற்கு (Land Registry) அனுப்பி வைத்தல்.
-
காணிப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர், அவ் அளிப்புப் பத்திரங்கள் மீண்டும் பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
பதிவு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட அளிப்புப் பத்திரங்கள், உரிய சேவைக்கட்டணங்கள் வசூலிக்கப்பட்ட பின்னர் காணி உரிமையாளர்களுக்குப் பிரதானம் செய்யப்படும்.
-
மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் / பிரதி காணி ஆணையாளர் அலுவலகம்.
-
பிரதேச செயலகத்தினால் அனுப்பி வைக்கப்படும் அளிப்புப் பத்திரங்களைப் பரிசீலித்து, தேவையான ஆவணங்களில் சதிசெய்து (பதிவு செய்து), குறைபாடுகள் அற்ற கொடைப்பத்திரங்களைக் காணி ஆணையாளர் நாயகம் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பர்.
-
குறைபாடுகள் நிலவும் அளிப்புப் பத்திரங்கள் மீண்டும் பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு திருத்தியமைக்கப்பட வேண்டும்.
-
ஜனாதிபதியின் செயலாளரினால் கையொப்பமிடப்பட்ட அளிப்புப் பத்திரங்கள் மீண்டும் பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்.
-
மாகாண காணி ஆணையாளர் / பிரதி காணி ஆணையாளர் மூலம் கிடைக்கப் பெறும் அளிப்புப் பத்திரங்களை ஆவணப்படுத்துதல் / வரவுப் புத்தகத்தில் பதிவு செய்தல்.
-
அளிப்புப் பத்திரங்களைப் பரிசீலித்தல். இதன்போது பின்வரும் விடயங்கள் பரிசீலிக்கப்படும்.
-
காணி ஆணையாளர் நாயகத்தின் 2008/01 இலக்கச் சுற்றறிக்கைக்கு அமைய பரிசீலித்தல்.
-
காணி ஆணையாளர் நாயகத்தின் 5/2/6/Ranbima சுற்றறிக்கை மற்றும் 2007.11.07 திகதியிட்ட சுற்றறிக்கைக்கு அமைய முதலாவது மற்றும் இரண்டாவது அட்டவணைகள் (Schedules) தயாரிக்கப்பட்டுள்ளதா எனப் பரிசீலிக்கப்பட வேண்டும்.
-
சரியான அளிப்புப் பத்திரங்களைப் பேரேடுகளில் (Ledger) பதிவு செய்தல்.
-
அளிப்புப் பத்திரங்களில் சிவப்பு லேபிள்களை ஒட்டி, ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்புவதற்கான மேலதிகக் கடிதத்தைத் (Covering Letter) தயாரித்தல்.
-
மேலதிகக் கடிதத்துடன் ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைத்தல்.
-
குறைபாடுகள் நிலவும் அளிப்புப் பத்திரங்கள் மீண்டும் மாகாண காணி ஆணையாளர் / பிரதி காணி ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
மேதகு ஜனாதிபதி அவர்களின் கையொப்பத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அவ் அளிப்புப் பத்திரங்கள் ஜனாதிபதியின் செயலாளரினால் எங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
அவ் அளிப்புப் பத்திரங்களின் நகல்களை (Duplicates) சான்றுப்படுத்தி, மூலப்பிரதியை உறைக்குள் இட்டு, மீண்டும் மாகாண காணி ஆணையாளர் / பிரதி காணி ஆணையாளர் / உதவி காணி ஆணையாளருக்கு அனுப்பி வைத்தல்.
-
ஜனாதிபதி செயலகம்.
-
காணி ஆணையாளர் நாயகம் மூலம் கிடைக்கப் பெறும் அளிப்புப் பத்திரங்களுக்கு, மேதகு ஜனாதிபதி அவர்களின் கையொப்பத்தின் உத்தியோகபூர்வ முத்திரையைச் (Facsimile Stamp) சான்றுப்படுத்தி, மீண்டும் காணி ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்தல்.
-
காணிப் பதிவகம் / காணிப் பதிவு அலுவலகம் (Land Registry).
-
மேதகு ஜனாதிபதி அவர்கள் கையொப்பமிட்ட அளிப்புப் பத்திரங்கள் பிரதேச செயலாளரினால் காணிப் பதிவகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பின்னர், அவை உரியவாறு பதிவு செய்யப்படும்.
-
அதன் பின்னர், மீண்டும் பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீட்டுக் கட்டளைகள் (ஒழுங்கு விதிகள்)
- அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் பூஜா உறுதிப் பத்திரம் வழங்குதல்
- விகாரைகளுக்காக வழங்கப்படுகிறது. முதலாவதாகப் தாயக சபைக்காக ஆரம்பக் குத்தகை வழங்கப்படும். இரண்டாவதாக விகாராதிபதி சுவாமிக்கும் அவரது சீட பரம்பரைக்கும் இலவச அளிப்புப் பத்திரம் வழங்கப்படும்.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை விடுவிக்கும் செயல்முறை.
-
உரிமைப் பத்திரம் வழங்குதல்
-
1979 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க காணி மானியங்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறுவோருக்கு (வருடாந்த வருமானம் ரூபா. 1,750 ஐ விடக் குறைவான) அரச காணிகளைப் பகிர்ந்தளிப்பதன் கீழ் உரிமைப் பத்திரங்கள் வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
-
பிரதேச செயலகம்.
-
காணியற்றவர்களின் தகுதிகளைப் பரிசீலித்து காணிகளைப் பகிர்ந்தளித்தல். இதற்காக உரிமைப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன.
-
காணி உரிமையாளர்களின் கோரிக்கையின் பேரில், காணி சரியாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்து, காணியை அளவிடுப்பதற்காக மாவட்ட நில அளவை உத்தியோகத்தர்களிடம் அளவீட்டுக் கட்டளையைப் பிறப்பித்தல்.
-
நில அளவைத் திணைக்களத்தினால் உரிய வரைபடம் தயாரிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், பிரதேச செயலாளர் L.C. 141 எனும் உரிய படிவத்தின் மூலம் சரியாகத் தயாரித்து மாகாண காணி ஆணையாளர் / பிரதி காணி ஆணையாளரிடம் சமர்ப்பித்தல் வேண்டும்.
-
உரிமைப் பத்திரங்களைத் தயாரிப்பதற்கு முன்னர், உரிய காணி அரசுக்கு சுவீகரிக்கப்பட்டதாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன், அவ்வர்த்தமானியின் பிரதி ஒன்றும் உரிமைப் பத்திரத்துடன் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
-
உரிமைப் பத்திரங்களுக்கு இலக்கங்கள் இடப்படக் கூடாது.
-
மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் / பிரதி காணி ஆணையாளர் அலுவலகம்.
-
பிரதேச செயலாளரால் உரிமைப் பத்திரங்கள் சரியாகத் தயாரிக்கப்பட்டுள்ளதா எனப் பரிசீலித்து, உரிய பதிவேடுகளில் பதிவுகளை மேற்கொண்டு காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்தல்.
-
குறைபாடுகள் இருப்பின் அவற்றை மீண்டும் பிரதேச செயலாளருக்கு அனுப்பி திருத்திக் கொள்ளுதல்.
-
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்..
-
கிடைக்கப் பெறும் உரிமைப் பத்திரங்களைப் பரிசீலித்தல். இதன்போது,
-
வரைபடத்துடன் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சரியானவையா எனப் பார்த்தல்.
-
தயாரித்தவர் மற்றும் பரிசீலித்தவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருத்தல்.
-
உரிய காணி அரசுக்கு சுவீகரிக்கப்பட்டதாக வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதா எனப் பார்த்தல்.
-
ஜனாதிபதியின் பெயர் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா எனப் பார்த்தல்.
-
உரிமைப் பத்திரம் பெறுபவரின் முகவரியுடன் கூடிய முழுப்பெயர் பதிவாகியுள்ளதா எனப் பார்த்தல்.
-
பிரதிகள் இருக்க வேண்டும். மூலப் பிரதி தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும். கார்பன் பிரதிகளின் வரைபடங்கள் மாவட்ட நில அளவை உத்தியோகத்தரினால் சான்றிதழ்ப்பட்டப்பட்டுள்ளதா எனப் பரிசீலித்தல்.
-
அனைத்து விபரங்களும் தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும். அழிப்பான் மைகளைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது.
-
பேரேட்டில் பதிடுதல்.
-
உரிமைப் பத்திரங்களுக்கு இலக்கங்களை வழங்கி அவற்றை உரிய பேரேட்டில் பதிடுதல். அவ்விலக்கத்தை உரிமைப் பத்திரத்தின் மேல் பகுதியில் தட்டச்சு செய்தல்.
-
மூலப் பிரதியில் சிவப்பு லேபிள் ஒட்டப்பட்டு, ஏனைய 3 பிரதிகளையும் தனியாகப் பிரித்து வைக்க வேண்டும்.
-
சிவப்பு லேபிள் ஒட்டப்பட்ட மூலப் பிரதியை ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்புவதற்காக முகப்புக் கடிதத்தைத் தயாரித்தல்.
-
முகப்புக் கடிதத்துடன் உரிமைப் பத்திரங்களை ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பி வைத்தல்.
-
ஜனாதிபதி செயலாளரால் சான்றிதழ்ப்படுத்தி அனுப்பப்பட்ட அளிப்புப் பத்திரங்களை பிரதி காணி ஆணையாளர் / மாகாண காணி ஆணையாளர் ஊடாக பிரதேச செயலாளருக்கு அனுப்புதல்.
-
ஜனாதிபதி செயலகம்.
-
உரிமைப் பத்திரங்களுக்கு அதிமேதகு ஜனாதிபதியின் கையொப்பத்தின் உருவ முத்திரையிட்டு சான்றிதழ்ப்படுத்தப்பட்டு மீண்டும் எங்களிடம் அனுப்பி வைத்தல்.
-
மாவட்ட காணிப் பதிவு அலுவலகம் (Land Registry).
-
அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கையொப்பமிட்டு பிரதேச செயலாளருக்கு அனுப்பிய உரிமைப் பத்திரங்களை, பிரதேச செயலாளர் பதிவிற்காக இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்.
-
பதிவு செய்யப்பட்டு மீண்டும் பிரதேச செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
-
பதிவின் பின்னர் பிரதேச செயலாளரால் அவ்வளிப்புப் பத்திரம் உரிய காணி உரிமையாளருக்கு வழங்கப்படும்.
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் விசேட அளிப்புப் பத்திரங்கள்
-
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் விசேட அளிப்புப் பத்திரங்கள்
-
விசேடக் காரணங்களுக்காக அதிமேதகு ஜனாதிபதியின் அனுமதியைப் பெற்று இவ்வளிப்புப் பத்திரங்களை வெளியிட முடியும். இதன்போது கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாது. அரசின் விசேட சமூகத் திட்டங்களுக்காக பல்வேறு அரசு நிறுவனங்களுக்குக் காணிகளை வழங்குதல் மற்றும் அரசினால் சுவீகரிக்கப்பட்ட தனியார் காணிகளுக்கு நஷ்டஈடு பெறாதவர்களுக்கு மாற்றுக் காணிகளை வழங்குதல் என்பன இதற்கான உதாரணங்களாகும்.