ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව

காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்

Land Commisioner General's Department

Ministry of Agriculture, Livestock, Land and Irrigation

පැති මෙනුව

eSlims

அரச காணி தகவல் முகாமைத்துவ முறைமை

அரச காணி முகாமைத்துவ நடவடிக்கைகளைத் திறம்பட மேற்கொள்வதற்காக, தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி "அரச காணி தகவல் முகாமைத்துவ முறைமை" (State Land Information Management System - SLIMS) உருவாக்கப்பட்டுள்ளது. அரச காணிகள் பற்றிய தகவல்களைப் பிரதேச செயலக மட்டத்திலான இத் தரவுத் தொகுதியில் உட்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், காணிகளைப் பகிர்ந்தளித்து ஆவணங்களை வழங்குதல், வருமானம் திரட்டும் செயல்முறை மற்றும் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் இம் முறைமையின் மூலம் மேற்கொள்ள முடியும். 2013 ஆம் ஆண்டில் மேல் மாகாணத்தின் 40 பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தை, 2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நாடு பூராகவும் உள்ள 332 பிரதேச செயலகப் பிரிவுகளில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடிந்தது.

Visit the Official e-Slims Portal

e-SLIMS தரவுத் தளத்தில் அல்லது அரச காணி தகவல் முகாமைத்துவ முறைமை என்பது, பிரதேச மட்டத்திலான அரச காணி முகாமைத்துவ நடவடிக்கைகளை ஒரு டிஜிட்டல் அணுகுமுறையின் ஊடாகத் திறம்பட மேற்கொள்வதற்காகக் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு இயக்க முறைமையாகும் (Operating System). இதன் மூலம் பிரதேச செயலகங்கள், மாகாண / சர்வதேச மாகாணக் காணி ஆணையாளர் அலுவலகங்கள், நில அளவைத் திணைக்களம், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் மற்றும் காணி அமைச்சு ஆகியன இந்த டிஜிட்டல் தகவல் முறைமையின் ஊடாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, காணி தொடர்பிலான கடமைகளை திறம்பட மேற்கொள்ளப்படுகின்றன.

eslims_images

அரச காணி தொடர்பான கடமைகளை மேற்கொள்ளும்போது முக்கியத்துவம் பெறுகின்ற அடிப்படைச் சட்டங்கள் மற்றும் சுற்று நிருபங்கள் மூலம் மேற்கொள்ளக்கூடிய பல காணி முகாமைத்துவ நடவடிக்கைகளை இதன் ஊடாக மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய,

  1. காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் காணி விடுவிப்பு நடவடிக்கைகள்
    • அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல்
    • நன்கொடைப் பத்திரங்கள் வழங்குதல்
  2. அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் காணி விடுவிப்பு நடவடிக்கைகள்
    • நீண்டகால குத்தகைக்குக் காணிகளை வழங்குதல்
    • வருடாந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்குதல்
    • இலவசக் அளிப்புப் பத்திரங்கள் வழங்குதல்
    • திணைக்களங்களுக்குக் காணிகளை வழங்குதல்
    • உள்ளூராட்சி நிறுவனங்களுக்குக் காணிகளை வழங்குதல்
  3. 2008/4 மற்றும் 2008/4(1) சுற்று நிருபங்கள்
    • காணி கச்சேரிகளை நடாத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல்
    • தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சைகளை/விசாரணைகளை நடாத்துதல்
    • இறுதித் தெரிவுகளுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுதல்

இது போன்ற நடவடிக்கைகளை e-SLIMS தரவுத் தளத்தின் மூலம் மிகவும் எளிதாகவும், துல்லியமாகவும், திறம்படவும் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

eslims_images

இந்த e-SLIMS தரவுத் தளமானது, அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஒரு தீர்மானமிக்க காரணியாக இருப்பதுடன், அத் திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லுமாகும்.

பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.