ඉඩම් කොමසාරිස් ජනරාල් දෙපාර්තමේන්තුව
காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம்
Land Commisioner General's Department
Ministry of Agriculture, Livestock, Land and Irrigation
சீதாவாக்கை பிரதேசத்தில் உள்ள காணிகள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று 2026 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி சீதாவாக்கை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கமத் தொழில், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் விதாரண அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் காணி ஆணையாளர் நாயகமும் கலந்து கொண்டார்.
இதன்போது சீதாவாக்கை பிரதேசத்தின் காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரை இணைத்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், அப்பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்துவதற்கும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டது
களுத்துறை மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் காணி தகராறுகள், குத்தகை பிரச்சினைகள் மற்றும் சுனாமி அளிப்புப் பத்திரங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டம் ஒன்று 2026 ஆகஸ்ட் மாதம் 13 மற்றும் 14 ஆகிய இரு தினங்களில் களுத்துறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதற்காக களுத்துறை மாவட்ட அரசியல் தலைமைகள், களுத்துறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பணியாளர்கள் மற்றும் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி காணி ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மாகாணங்களுக்கு இடையிலான அலுவலகங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள குடியேற்ற உத்தியோகத்தர்களின் தொழில்வாண்மையிலான அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரு நாள் அளவையியல் மற்றும் நிலப் பட வரைவியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் கட்டம் அண்மையில் தியத்தலாவையில் அமைந்துள்ள அளவையியல் மற்றும் நிலப் பட வரைவியல் நிறுவனத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
நிகழ்ச்சித்திட்ட வடிவமைப்பு, வளவாளர்களின் பங்களிப்பு மற்றும் பயிற்சி அமர்வுகளை நடாத்துதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் அளவையியல் மற்றும் நிலப் பட வரைவியல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டடன. அளவையியலின் அடிப்படை கருத்துக்கள், நிலப் படங்களை வாசித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல், நில அளவை முறைகள், நவீன அளவையியல் தொழில்நுட்பம் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர்களின் அன்றாட கடமைகளுக்குப் பொருத்தமான நடைமுறை விடயங்கள் குறித்த பரந்த அறிவும் நடைமுறைப் பயிற்சியும் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டன. இந் நிகழ்ச்சித் திட்டத்தில் விரிவுரைகளுக்கு மேலதிகமாக நடைமுறைச் செயல்பாடுகள், அனுபவப் பகிர்வுகள் மற்றும் புலத்தில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்ப முறைகள் பற்றிய விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டதுடன், பங்கேற்ற குடியேற்ற உத்தியோகத்தர்கள் அந்த அமர்வுகளில் மிகவும் ஆர்வத்துடனும் செயலூக்கமாகவும் பங்களித்தனர்.
காணி நிர்வாகத் துறையில் திறனினையும் சேவைத் தரத்தினையும் உயர்த்துவதற்காகக் குடியேற்ற உத்தியோகத்தர்களின் தொழில்வாண்மையிலான ஆற்றல்களைத் தொடர்ச்சியாக அபிவிருத்தி செய்வது காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் பரதானமான நோக்கமாக இருப்பதுடன், அதன் மற்றொரு கட்டமாகவே இந்தப் பயிற்சிப் பட்டறை நடாத்தப்பட்டது. இந் நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குப் பங்களிப்பு வழங்கிய அளவையியல் மற்றும் நிலப் பட வரைவியல் நிறுவனத்தின் பணிப்பாளர், பிரதி அளவயியல் நாயகம் (கல்வி) உள்ளிட்ட அனைத்து வளவாளர்களுக்கும் ஏற்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பங்களித்த அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மஹியங்கனை மாகாணங்களுக்கு இடையிலான காணி ஆணையாளர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட, கெமுனுபுர குடியேற்றத் திட்டத்தின் பயனாளிகளுக்கு 46 காணி உரிமங்களை வழங்கும் விழா 2026 ஜூலை 30 ஆம் திகதி மஹியங்கனை பிரதேச செயலகத்தின் 'சம்பாஷணி' கேட்போர் கூடத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
பிரதம விருந்தினராக மஹியங்கனை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ சுதத் பலகல்ல அவர்களும், சிறப்பு விருந்தினராக மஹியங்கனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சட்டத்தரணி உபேக்ஷா விஜேதுங்க அவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மஹியங்கனை மாகாணங்களுக்கு இடையிலான காணி ஆணையாளர் அலுவலக அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இக்காணி உரிமங்களை வழங்குவதன் மூலம் பயனாளிகளின் சட்டப்பூர்வ காணி உரிமையை உறுதிப்படுத்த முடிந்ததுடன், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியும் எடுக்கப்பட்டது.
பொதுப் நிர்வாகத்தில் ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லாளுமைக் கோட்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் 'சுபிளிபன் வாரம்' (நல்லொழுக்க வாரம்) முன்னிட்டு, காணி ஆணையாளர் நாயகம் திணைக்கள உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நல்லொழுக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு இன்று திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது, அனைத்து உத்தியோகத்தர்களும் அரசு ஊழியர்களாக சட்டத்தை மதித்து, லஞ்சம் மற்றும் ஊழலற்ற, நேர்மையான, வெளிப்படையான மற்றும் மக்களுக்கு உகந்த சேவையை வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இம்முறை நல்லொழுக்க வாரம் 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை செயல்படுத்தப்படும் அதேவேளையில், அரசு நிறுவனங்களுக்குள் நன்னெறி நிர்வாக கலாச்சாரத்தை உருவாக்குதல், லஞ்சம் மற்றும் ஊழலைத் தடுத்தல், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவித்தல் அத்துடன் அரசு சேவை மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துதல் என்பன இதன் முக்கிய நோக்கங்களாகும்.
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களமும் இந்த தேசிய திட்டத்தில் இணைந்து, நல்லொழுக்கமிக்க அரசு சேவையை உருவாக்குவதற்கான தனது நிறுவன அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தினால் மாகாணங்களுக்கு இடையிலான அலுவலகங்களுக்கு இணைக்கப்பட்ட குடியேற்ற உத்தியோகத்தர்களின் தொழில்சார் அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இரு நாள் அளவையியல் மற்றும் நிலப்பட வரைவியல் (Surveying and Mapping) பயிற்சித் திட்டம் அண்மையில் தியத்தலாவையில் அமைந்துள்ள அளவையியல் மற்றும் நிலப்பட வரைவியல் நிறுவனத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. நிகழ்ச்சித் திட்டம், வளவாளர்களின் பங்களிப்பு மற்றும் பயிற்சி அமர்வுகளை நடாத்துதல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளும் அளவையியல் மற்றும் நிலப்பட வரைவியல் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டதோடு, அளவையியலின் அடிப்படைப் கருத்துருக்கள், நிலப்படங்களைப் படித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல், நில அளவை முறைகள், நவீன அளவையியல் தொழில்நுட்பம் மற்றும் குடியேற்ற உத்தியோகத்தர்களின் அன்றாடக் கடமைகளுக்குத் தேவையான நடைமுறை விடயங்கள் குறித்தும் விரிவான அறிவும் நடைமுறைப் பயிற்சியும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்தத் திட்டத்தில் விரிவுரைகளுக்கு மேலதிகமாக நடைமுறைச் செயல்பாடுகள், அனுபவப் பகிர்வுகள் மற்றும் களத்தில் பயன்படுத்தப்படும் புதிய தொழில்நுட்ப முறைகள் பற்றிய விழிப்புணர்வுகளும் இடம்பெற்றதுடன், கலந்துகொண்ட குடியேற்ற உத்தியோகத்தர்கள் அந்த அமர்வுகளில் மிகவும் ஆர்வத்துடனும் செயலூக்கமாகவும் பங்களித்தனர்.
காணி நிர்வாகத் துறையின் செயற்றிறன் மற்றும் சேவைத் தரத்தை உயர்த்துவதற்காக குடியேற்ற உத்தியோகத்தர்களின் தொழில்முறை திறன்களைத் தொடர்ந்து அபிவிருத்தி செய்வது காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் பிரதானமான நோக்கமாகும், அதன் ஒரு கட்டமாகவே இந்தப் பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு பங்களிப்பு வழங்கிய அளவையியல் மற்றும் நிலப்பட வரைவியல் நிறுவனத்தின் பணிப்பாளர் அம்மையார், பிரதி சர்வேயர் ஜெனரல் (கல்வி) உள்ளிட்ட அனைத்து வளவாளர்களுக்கும், ஏற்பாட்டுப் பணிகளில் பங்களித்த அனைத்து அதிகாரிகளுக்கும் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
காணி ஆணையாளர் நாயகத்தின் பங்கேற்புடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் காணிப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் நடமாடும் சேவைத் திட்டம் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதிகள், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகள், மாகாணக் காணி ஆணையாளர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்திற்கு நியமனம் பெற்ற புதிய முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர்களை வரவேற்பதற்கும், அவர்களைச் சிறந்த அரச சேவையை நோக்கி வழிநடாத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் பயிலரங்கு கடந்த புதன்கிழமை ஆரம்பமானது.
இதன்போது, முதல் நாளில் புதிய முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர்களை வரவேற்கும் நிகழ்வு காணி ஆணையாளர் நாயகத்தின் பங்கேற்புடன் நடைபெற்றது. இரண்டாம் நாளில் "நான் எவ்வாறு ஒரு வளமாக மாறுவது" எனும் தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புப் பயிற்சித் திட்டம், ஓய்வுபெற்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான பிரதீபா சேரசிங்க அவர்களின் வளவாளர் பங்களிப்புடன் திணைக்களக் கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதன்போது அரச சேவையில் இணைந்த புதிய உத்தியோகத்தர்களின் மனப்பான்மையை மேம்படுத்தி, பொதுமக்களுக்காக அதிகபட்ச அர்ப்பணிப்பு, திறமை மற்றும் உற்பத்தித்திறனுடன் சேவையாற்றுவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
மூன்று நாள் பயிற்சித் திட்டத்தின் இறுதி நாளான இன்று, தெஹிவளை-இரத்மலானை தகவல் மைய வளாகத்தில் திணைக்களத்திற்குச் சொந்தமான e-SLIMS அமைப்புத் தொடர்பான அடிப்படை அறிமுகத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காணி ஆணையாளர் நாயகத்தின் வழிகாட்டலின் கீழ், காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கான மனப்பாங்கு விருத்தி தொடர்பாக விசேட விரிவுரை ஒன்று அண்மையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இவ் விரிவுரைக்கான வளவாளர் பங்களிப்பினை திரு. லலித் சுமனசிறி அவர்கள் வழங்கியிருந்தார்.
இந் நிகழ்வில் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் (Staff Officers) உட்பட அனைத்து உத்தியோகத்தர்களும், காணி அமைச்சு மற்றும் காணி உரித்துக்களை நிர்ணயித்தல் திணைக்களத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களும் பங்கேற்றனர்.
அரசாங்க சேவையின் வினைத்திறன், நேர்மறையான மனப்பாங்கு மற்றும் தொழில்சார் விழுமியங்களை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இவ் விரிவுரைக்கு பெறுமதிமிக்க வளவாளர் பங்களிப்பை வழங்கிய திரு. லலித் சுமனசிறி அவர்களுக்கு காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
கௌரவ காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத் வித்தாரண அவர்களின் தலைமையில் மற்றும் காணி ஆணையாளர் நாயகத்தின் பங்கேற்புடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டம் ஒன்று அண்மையில் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் காணி ஆணையாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகள், மாகாண காணி ஆணையாளர் மற்றும் இடைமாகாண காணி ஆணையாளர் அலுவலகங்களின் அதிகாரிகள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகள் பங்குபற்றியிருந்தனர்.
பதிப்புரிமை © 2026 காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.